Home இலங்கை சமூகம் குடும்ப சுமையை தாங்கும் சிறுவன் – பிரமிக்கும் இலங்கையர்கள்

குடும்ப சுமையை தாங்கும் சிறுவன் – பிரமிக்கும் இலங்கையர்கள்

0

காலி,
இமதுவ பிரதேச செயலகப் பிரிவின் ஹட்டங்கல கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் 11 வயதுடைய மாணவனின் செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

நிம்சர ரவிந்து பிரபாத் என்ற 11 வயது சிறுவன் தொரபே மேல் நிலைப் பாடசாலையில் 6ஆம் வகுப்பில் கற்று வருகிறார்.

பாடசாலை படிப்பு அல்லாமல் அவருக்கு நிறைய வேலை இருப்பதாக கூறப்படுகின்றது. நிம்சரவின் தந்தை சில வருடங்களுக்கு முன்பு மரத்தில் இருந்து விழுந்தமையினால் ஒரே இடத்தில் முடங்க நேரிட்ட நிலையில் குடும்ப சுமைகளை அம்மா ஏற்றுக்கொண்டார்.

நீரழிவு நோய்

துரதிஷ்டவசமாக, சில மாதங்களுக்கு முன்பு, அவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு அவரது காலை இழக்க வேண்டியிருந்தது. இப்போது நிம்சரவின் அப்பா மட்டுமின்றி அம்மாவும் ஒரே இடத்தில் முடங்கியுள்ளனர்.

தற்போது 11 வயதான நிம்சர அப்பா, அம்மாவின் அனைத்து வேலைகளையும் செய்து, சமையல் செய்து அதனை ஊட்டவும் நேரிட்டுள்ளது.

மேலும், நிம்சரவின் பெற்றோர் இருவரும் ஊனமுற்றோர் உதவித்தொகையை பெற்று வருகின்றனர்.

குடும்ப சுமை

அந்த பணத்தில் நிம்சர குடும்பச் சுமைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு குடும்பத்தை தாங்கி வருகின்றார்.

அதேவேளை, நிம்சர, எத்தனை தடைகள் வந்தாலும் பாடசாலை செல்வதை நிறுத்துவதில்லை. அதிகாலையில் எழுந்து அப்பா, அம்மா செய்யும் வேலைகள் அனைத்தையும் செய்து, உணவு சமைத்து விட்டு பாடசாலைக்கு சென்று வருகின்றார். இந்த சிறுவன் பலருக்கும் முன்மாதிரியாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையி்ல நிம்சரவின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு காலி மாவட்ட செயலாளர் தர்மசிறி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

NO COMMENTS

Exit mobile version