Home இந்தியா கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: உயரும் பலி எண்ணிக்கை

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: உயரும் பலி எண்ணிக்கை

0

இந்தியா (India) கள்ளக்குறிச்சியில் (kallakurichi) கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 18ஆம் திகதி விற்பனை செய்யப்பட்ட எத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தால் பலர் பலியாகியுள்ளதுடன் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மருத்துவமனையில் உள்ள நோயாளிகளில் சிகிச்சையில் உள்ள 90க்கும் மேற்பட்டோரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளதுடன் இதுவரை 8 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்பு எண்ணிக்கை 

இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர்களில் ஒருவர் நேற்று (27) உயிரிழந்துள்ளார்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகேஷ் என்பவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனால், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/kallakurichi-hooch-tragedy-death-toll-rises-to-64-1719522977

NO COMMENTS

Exit mobile version