Home இந்தியா வைரலாகும் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்டின் திருமண அழைப்பிதழ்

வைரலாகும் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்டின் திருமண அழைப்பிதழ்

0

உலக பணக்காரரான முகேஷ் அம்பானி(Mukesh Ambani) மகன் ஆனந்த் அம்பானி(Anant Ambani), ராதிகா மெர்ச்சண்ட் (Radhika Merchant) திருமண அழைப்பிதழ் காணொளி இணையதளத்தில் பெரிதளவில் பகிரப்பட்டு வருகிறது.

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் குஜராத்தில் பிரமாண்டமாக நடந்தது.

திருமணம் வரும் ஜூலை 12-ம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அவர்களின் திருமண அழைப்பிதழ் காணொளி இணையத்தில் வெளியாகி பகிரப்பட்டு வருகிறது.

திருமண அழைப்பிதழ்

அந்த காணொளியில் திருமண அழைப்பிதழ் அட்டையில் விநாயகர், விஷ்ணு, லட்சுமி, ராதா-கிருஷ்ணா மற்றும் துர்கை உள்ளிட்ட பல இந்து தெய்வங்களின் படங்கள் உள்ளன.

இந்து கடவுள்களின் படங்களுடன் வண்ண வண்ண அட்டைகளில் திருமண நிகழ்வு குறித்த தகவல்கள்மற்றொரு சிறு பெட்டியில் தங்கம். வெள்ளி முலாம் பூசப்பட்ட கடவுள் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

விலையுயர்ந்த பட்டு துணிகள், உலர் பழங்கள் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன.

கோவில் போன்றதொரு வடிவில் பெட்டியொன்று உள்ளது, அதில் ஹிந்தியில் மந்திரங்கள் ஒலியுடன், தங்க விக்ரஹம், பட்டு வஸ்திரம், வெள்ளி கோவில் விமானம் என பிரமாண்டமாக காட்சியளிக்கிறது.

இந்த காணொளியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த திருமண அழைப்பிதழ் சினிமா, அரசியல், தொழிலதிபர்கள் என முக்கியஸ்தர்களுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version