Home இலங்கை சமூகம் இலங்கை மக்கள் புகைபிடிக்க நாளொன்றுக்கு செலவிடும் தொகை தெரியுமா..!

இலங்கை மக்கள் புகைபிடிக்க நாளொன்றுக்கு செலவிடும் தொகை தெரியுமா..!

0

இலங்கை மக்கள் புகைபிடிப்பதற்கு  நாளொன்றுக்கு 52 கோடி ரூபாவை செலவிடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதிகரிக்கும் புகைப்பழக்கம்

மேலும், புகைப்பழக்கம் காரணமாக நாளாந்தம் சுமார் 50 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

83 வீதமான மரணங்கள் தொற்றாத நோய்களினால் ஏற்படுவதாகவும், புகைபிடித்தல் இதற்கான முக்கிய காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்,இலங்கையில் வருடமொன்றுக்கு 2,300 சிகரெட் துண்டுகள் சுற்றுச்சூழலில் கிடப்பதாக போதைப்பொருள் தகவல் மையம் மேலும் தெரிவித்துள்ளது.

Source: https://ibctamil.com/article/smoking-costs-more-per-day-in-sri-lanka-1714409688

NO COMMENTS

Exit mobile version