Home இலங்கை சமூகம் யாழ். வாக்கு எண்ணும் மத்திய நிலையத்தில் களமிறக்கப்பட்டுள்ள கலகத்தடுப்பு காவல்துறையினர்

யாழ். வாக்கு எண்ணும் மத்திய நிலையத்தில் களமிறக்கப்பட்டுள்ள கலகத்தடுப்பு காவல்துறையினர்

0

யாழ்ப்பாணம் (Jaffna) வாக்கு எண்ணும் மத்திய நிலையத்தில் கலகத்தடுப்பு காவல்துறையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலின் வாக்குகள் என்னும் பணியானது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கண்ணன் நிலையத்தில் நடைபெற்று வருகின்றது.

கலகத்தடுப்பு காவல்துறையினர் 

இந்நிலையில் வன்முறைகளை தடுப்பதற்காக காவல்துறையினர், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அதி தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சற்று முன்னர் கலகத் தடுப்பு காவல்துறையினரும் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://ibctamil.com/article/anti-riot-police-deployed-in-jaffna-counting-1731605418

NO COMMENTS

Exit mobile version