Home சினிமா கவிஞர் சினேகன் குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய கமல்ஹாசன்.. இது நல்ல இருக்கே

கவிஞர் சினேகன் குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய கமல்ஹாசன்.. இது நல்ல இருக்கே

0

சினேகன் 

புத்தம் புது பூவே என்ற பாடல் எழுதி பாடலாசிரியராக களமிறங்கியவர் சினேகன். பின்னர் பாண்டவர் பூமியில் அவரவர் வாழ்க்கையில், தோழா தோழா ஆகிய பாடல்களை எழுத செம ஹிட்டடித்தது.

மௌனம் பேசியதே படத்தில் ஆடாத ஆட்டமெல்லாம், சாமி படத்தில் கல்யாணம் தான் கட்டிகிட்டு, ஆட்டோகிராப் படத்தில் ஞாபகம் வருதே, ராம் படத்தில் ஆராரிராரோ, ஆடுகளம் படத்தில் யாத்தே உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார்.

அதன் பின், பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார். ஆனால், இவர் எழுதிய பாடல்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தான் அதிக அளவில் பிரபலமானது.

கடந்த 2021ம் ஆண்டு சினேகன் தனது நீண்ட நாள் காதலியான கன்னிகாவை திருமணம் செய்துகொண்டார். கர்ப்பமாக இருந்த கன்னிகாவுக்கு கடந்த ஜனவரி 25ம் தேதி இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தனர்.

சின்னத்திரையில் களமிறங்கும் முன்னணி நடிகை வரலட்சுமி.. எந்த நிகழ்ச்சியில் பாருங்க

இது நல்ல இருக்கே 

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனை சினேகன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் சந்தித்துள்ளனர். அப்போது கமல்ஹாசன் இரு குழந்தைகளுக்கும் தங்க வளையல் அணிவித்து குழந்தைகளுக்கு “காதல், கவிதை என பெயர் சுட்டி உள்ளார். இது குறித்து, சினேகன் அவரது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.        

NO COMMENTS

Exit mobile version