Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் சூரியமின்கல யானை வேலி அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

கிளிநொச்சியில் சூரியமின்கல யானை வேலி அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

0

காட்டு யானைகளிடமிருந்து விவசாயிகளின் வாழ்வாதார பயிர்களை பாதுகாக்கும்
நோக்குடன் சூரியமின்கல யானை வேலி அமைக்கும் வேலைத்திட்டம் கிளிநொச்சி
மாவட்டத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

குறித்த செயற்திட்டம் நேற்று(15.10.2024) இடம்பெற்றுள்ளது.

உலக வங்கியின் நிதியுதவியில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய
திட்டத்தின் கீழ் பூநகரி கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட செம்மன்குன்று
பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

விவசாய திட்டம்

குறித்த திட்டமிடமானது வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு
மாவட்டங்களை உள்ளடக்கியதாக மேற்கொள்ளப்படுகிறது.

கிளிநொச்சியில் பூநகரி, அக்கராயன்குளம், முழங்காவில் கமநல சேவை
நிலையத்திற்குற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில்
முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த நிகழ்வில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின்
சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகாரி சா.கேசிகா, பூநகரி கமநல சேவை நிலைய
அபிவிருத்தி உத்தியோகத்தர் கு.குணசீலன், விவசாயிகள் உள்ளிட்ட பலரும் கலந்து
கொண்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version