Home இலங்கை சமூகம் முல்லைத்தீவு முள்ளியவளை முகாமில் இராணுவ வீரர் பலி! மூவர் வைத்தியசாலையில்

முல்லைத்தீவு முள்ளியவளை முகாமில் இராணுவ வீரர் பலி! மூவர் வைத்தியசாலையில்

0

முல்லைத்தீவு, முள்ளியவளையில் உள்ள 59 ஆவது படைப்பிரிவு முகாமில் கைவிடப்பட்ட கட்டடத்தின் செங்கல் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் மேலும் 3 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

குருநாகலைச் சேர்ந்த 24 வயதுடைய இராணுவ வீரரே உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த வீரர்கள்  வைத்தியசாலையில் 

சம்பவம் இடம்பெற்றபோது உயிரிழந்த இராணுவ வீரரும், காயமடைந்த 3 இராணுவ வீரர்களும் விறகு சேகரித்துக் கொண்டிருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு காயமடைந்த வீரர்கள் மூவரும் மாஞ்சோலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version