Home முக்கியச் செய்திகள் யாழில் இடம்பெறவுள்ள சுனாமி ஒத்திகை நிகழ்வு

யாழில் இடம்பெறவுள்ள சுனாமி ஒத்திகை நிகழ்வு

0

தேசிய ரீதியாக சுனாமிக்கான ஒத்திகை நிகழ்வொன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது.

சுமாத்திரா தீவை அண்மித்த கடல் பகுதிகளில் பல சிறிய நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக பதிவாகிவருகின்றது.

இலங்கையும் சுனாமிக்கு தயாரான நாடு என்ற வகையில் யாழ்ப்பாணம், களுத்துறை, மாத்தறை, மற்றும் மட்டக்களப்பு ஆகிய நான்கு மாவட்டங்களை பிரதானமாகக் கொண்டு நாட்டின் பிற மாவட்டங்களையும் உள்ளடக்கி தேசிய சுனாமி ஒத்திகை நிகழ்வானது இந்திய பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை மையத்தின் கீழ் உள்ள 28 நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடமராட்சி வடக்கு பிரதேசம்

இந்தநிகழ்வின் ஒருபகுதியாக யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள பருத்தித்துறை கிராம உத்தியோகத்தர் பிரிவான J/401 இல் 05.11.2025 ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.00 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் தேசிய ரீதியாக சுனாமிக்கான ஒத்திகை நிகழ்வொன்று நடைபெறவுள்ளது.

இது ஒரு ஒத்திகைச் செயற்பாடு என்பதனால் இது தொடர்பில் பொதுமக்கள் எவரும் குழப்பமடையத் தேவையில்லை என யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version