இலங்கை-இந்திய இருதரப்பு இராணுவப் பயிற்சியின் 11ஆவது பதிப்பான மித்ர சக்தி
பயிற்சியில் பங்கேற்ற இலங்கை இராணுவக் குழுவினர் நாடு திரும்பியுள்ளனர்.
2025 நவம்பர் 10 முதல் 22 வரை இந்தியாவின் கர்நாடகாவில் உள்ள வெளிநாட்டு
பயிற்சி முனையத்தில் நடத்தப்பட்ட பயிற்சித் திட்டத்தில் பங்கேற்ற படையினரே
மத்தளை விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பியுள்ளனர்.
இராணுவ ஒத்துழைப்பு
இந்தப் பயிற்சியில் 125 இலங்கை இராணுவ வீரர்களும் 10 இலங்கை விமானப்படை
வீரர்களும் பங்கேற்றனர்.
இந்தப் பயிற்சி இரு படைகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பு, கலாசார புரிதல்
மற்றும் நட்புறவை மேம்படுத்துவதற்கான ஒரு பயனுள்ள தளத்தை வழங்கியதாக இரண்டு
நாடுகளும் தெரிவித்துள்ளன.
