Home இலங்கை அரசியல் தையிட்டி விகாரையின் இடமாற்றம்: அநுர அரசாங்கத்திற்கு காத்திருக்கும் அதிர்ச்சி

தையிட்டி விகாரையின் இடமாற்றம்: அநுர அரசாங்கத்திற்கு காத்திருக்கும் அதிர்ச்சி

0

தையிட்டி விகாரையை இடப்பெயர்த்து வேறு இடத்தில் நிலை நிறுத்தினாலும் முரண்பாடுகள் முடிவுக்கு வராது என ராகுல தேரர் தெரிவித்துள்ளார்.

விகாரையை அகற்றி விட்டு, காணி உரிமையாளர் அங்கு குடிபெயர்ந்தாலும் , ஒரு விகாரையை அகற்றி விட்டு அங்கு குடிபெயர்ந்து விட்டோமே என்ற உறுத்தல் அவர் மனதில் ஏற்படும் என தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, அவ்வாறு ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டால் தென்னிலங்கையில் உள்ள மக்கள், தமிழ் இனத்தை இன்னும் தரம் தாழ்த்தியே எண்ணுவார்கள் என்றும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், தையிட்டி விகாரையின் காணி உறுதி பத்திரத்தை வைத்திருக்கும் நயினாதீவு நாகதீப விஹாராபதி நினைத்தால் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றும் ராகுல தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், புத்தசாசன அமைச்சில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தை அடுத்தவர்கள் காணியை அபகரித்து விகாரை கட்ட யார் அனுமதி கொடுத்தது, அபகரிக்கப்பட்ட காணியில் கட்டப்பட்ட விகாரைக்கு மின்சார சபை எவ்வாறு மின்சாரம் வழங்கியது என நாகதீப விஹாராபதி சட்டத்தை நாடினால் இதற்கு அரசாங்கம் பதில் வழங்க வேண்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி விடயங்கள் குறித்து ராகுல தேரர் தெளிவுப்படுத்திய விடயங்கள் ஐபிசி தமிழின் இன்றைய அகளங்கம் நிகழ்ச்சியில்….. 

 

https://www.youtube.com/embed/vU3GsyxT8qw

NO COMMENTS

Exit mobile version