Home இலங்கை அரசியல் மீண்டும் இருதரப்பு பேச்சுவார்த்தை: புதுப்பிக்கப்படவுள்ள கடற்றொழில் அணுகுமுறை

மீண்டும் இருதரப்பு பேச்சுவார்த்தை: புதுப்பிக்கப்படவுள்ள கடற்றொழில் அணுகுமுறை

0

தென்னிந்திய கடற்றொழிலாளர்கள், இழுவைபடகுகளைப் பயன்படுத்தி கடற்றொழில் ஈடுபட்டுள்ளதோடு, சட்டவிரோத உபகரணங்களையும் பயன்படுத்துவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக இந்திய இலங்கை கடற்றொழிலாளர்கள் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் காண்பதற்காக மீண்டும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ரத்ன கமகே கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தென்னிந்திய கடற்றொழிலாளர்கள் இழுவைபடகுகளைப் பயன்படுத்தி கடற்றொழில் ஈடுபட்டுள்ளதோடு சட்டவிரோத உபகரணங்களையும் பயன்படுத்துகின்றார்கள்.

இலங்கை கடற்றொழிலாளர்கள்

இதனை இலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர்க்கின்றார்கள். அத்துடன் இந்த நடைமுறைகள் இந்தியப் பெருங்கடலின் கடல் வளங்களுக்கும் தீங்கு விளைவிப்பதால் இரு தரப்பினருக்குமே பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.

இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இந்தியத் தரப்பும் தயாராக உள்ளது.

தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் விடயங்களை முன்னெடுப்பதற்கு நாமும் தயாராகவே உள்ளோம்.

ஆனால் அடுத்து வரும் காலத்தில் புதுப்பிக்கப்பட்ட அணுகுமுறையுடன், இந்திய அதிகாரிகளுடன் விரிவான இருதரப்பு பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது” என்றார்.

NO COMMENTS

Exit mobile version