Home இலங்கை அரசியல் அரசியலுக்கு விடைகொடுக்க முன்னாள் சிங்கள எம்.பிக்கள் சிலர் திட்டம்!

அரசியலுக்கு விடைகொடுக்க முன்னாள் சிங்கள எம்.பிக்கள் சிலர் திட்டம்!

0

எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில்
போட்டியிடாதிருக்க முன்னாள் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்
தீர்மானித்துள்ளனர்.

அரசியல்வாதிகளின்  எதிர்கால அரசியல்

தேசிய மக்கள் சக்திக்கான வெற்றி வாய்ப்பு தமது மாவட்டத்தில் அதிகம் என்பதால்,
போட்டியிட்டாலும் தோல்வி ஏற்படும் எனக் கருதும் சில பெரும்பான்மை நாடாளுமன்ற
உறுப்பினர்களே, தேர்தலில் இருந்து ஒதுங்குவதற்கு முடிவெடுத்துள்ளனர் என
அறியமுடிகின்றது.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தியுடன் இணைவதற்கு ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள்
முன்னெடுத்த முயற்சியும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க பக்கம் நின்ற நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கு சஜித் அணியும் கதவடைப்பு செய்துள்ளதால் ஒரு சில
அரசியல்வாதிகளின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version