கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டுவதனை தோற்கடிக்க சதித் திட்டம் தீட்டப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காலாநிதி ஹர்ஷ சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் தாம் வெற்றியீட்டி நாடாளுமன்றம் செல்வதனை தடுக்க முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
போலி பிரசாரம்
இதற்தாக தமக்கு எதிராக பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக இவ்வாறு போலி பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாக ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.