Home இலங்கை சமூகம் ஒரே நாளில் இரத்து செய்யப்பட்ட 15 தொடருந்து சேவைகள்! வெளியான முக்கிய காரணம்

ஒரே நாளில் இரத்து செய்யப்பட்ட 15 தொடருந்து சேவைகள்! வெளியான முக்கிய காரணம்

0

நாட்டில் இன்று(26) இயக்கப்படவிருந்த சுமார் 15 தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து பிரதி பொது மேலாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,”தொடருந்து சாரதிகள் சுகயீன விடுப்பு அறிவித்ததால் தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டதுடன் இன்று காலை பல பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சுகயீன விடுப்பு 

இந்த தொடருந்து சேவை, தொடருந்து சாரதிகளின் வெற்றிடங்களை அடிப்படையாகக் கொண்டு பராமரிக்கப்படுகிறது.

வார இறுதி நாட்களில் அவர்கள் தங்கள் தேவைகளுக்காக விடுப்பு கோரினாலும், தொடருந்து துறையால் அந்த விடுப்பை வழங்க முடியாது.

எனவே, அவர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப சுகயீன விடுப்பைப் முறைப்பாடு அளித்து தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்கள்.”என கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version