மாமன்
தமிழ் சினிமாவில் தற்போது மிரட்டலான ஹீரோவாக கலக்கிக்கொண்டு இருக்கிறார் சூரி. இவர் விடுதலை, கருடன், கொட்டுக்காளி என தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து அசத்தி வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் மாமன் திரைப்படம் வெளியானது. எமோஷனல் கதைக்களத்தில் உருவாகி இருந்த இப்படத்தை பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கியிருந்தார்.
மேலும் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்க, ஸ்வாசிகா, ராஜ்கிரண், விஜி சந்திரசேகர், பாபா பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
விஜய் கட்சி குறித்து கேள்வி.. நடிகர் கமல்ஹாசன் சொன்ன அதிரடி பதில்
OTT ரிலீஸ்
இந்நிலையில், இப்படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, வரும் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் ஜீ5 OTT தளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
