Home சினிமா படையப்பா படத்தில் ரஜினியுடன் நடித்தது குறித்து மறைந்த நடிகை சௌந்தர்யா பேட்டி… என்ன கூறியுள்ளார் பாருங்க

படையப்பா படத்தில் ரஜினியுடன் நடித்தது குறித்து மறைந்த நடிகை சௌந்தர்யா பேட்டி… என்ன கூறியுள்ளார் பாருங்க

0

படையப்பா

படையப்பா, 90ஸ் கிட்ஸ் இல்லை, Gen கிட்ஸ் என அடுத்தடுத்து எத்தனை தலைமுறை வந்தாலும் ரசித்துப் பார்க்கும் ஒரு திரைப்படமாக உள்ளது படையப்பா.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1999ம் ரஜினி, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், சிவாஜி கணேசன், மணிவண்ணன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க படம் வெளியாகி இருந்தது.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே செம சூப்பர் டூப்பர் ஹிட்.

ரீ-ரிலீஸ்

தற்போது படம் 26 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது. அதோடு ரஜினி இப்படம் குறித்து மக்களுக்கு தெரியாத பல விஷயங்களையும் பகிர்ந்துள்ளார்.

இந்த நிலையில் படத்தில் முக்கிய நாயகியாக நடித்துள்ள சௌந்தர்யா இப்படம் குறித்து பேசிய பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

அதில் அவர், ரஜினியுடன் அருணாச்சலம் படத்தில் நடித்ததே பெரிய விஷயம் என இருந்தேன், நான் எதிர்ப்பார்க்காத விஷயமாக இருந்தது. படையப்பா வாய்ப்பு வந்தபோது எப்படி ரியாக்ட் செய்வது என தெரியவில்லை.

ஆனால் ரஜினி சாருடன் பணிபுரிவது நன்றாக இருக்கும், அவருடன் பணிபுரிந்தது நல்ல அனுபவம், மிகவும் அருமையான மனிதர் என பேசியுள்ளார்.‘

NO COMMENTS

Exit mobile version