Home உலகம் தென் கொரிய ஜனாதிபதியை கைது செய்ய அதிரடி உத்தரவு

தென் கொரிய ஜனாதிபதியை கைது செய்ய அதிரடி உத்தரவு

0

தென் கொரிய ஜனாதிபதி யுன் சுக் யோலை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

குறித்த பிடியாணை சியோல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நீதிமன்றத்தை தவிர்த்த குற்றச்சாட்டின் பேரில் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பதவி நீக்கம்

தென் கொரியா ஜனாதிபதி யூன் சுக் யோல் கடந்த 3ம் தேதி திடீரென நாட்டில் இராணுவ சட்டத்தை நடைமுறைப்படுத்தினார். அரசுக்கு எதிரான நடவடிக்கைகளால் இராணுவ சட்டத்தை நடைமுறைப்படுத்தியதாக அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்டு பதவியை இழந்தார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனவரி 6 ஆம் திகதிக்கு முன்னர் அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சியோல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

தென் கொரியாவில் தற்போதைய ஜனாதிபதி ஒருவருக்கு பிறப்பிக்கப்பட்ட முதல் பிடியாணை இது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

டிசம்பர் 14 அன்று ஜனாதிபதி யூன் சுக் இயோல் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தென் கொரியப் பிரதமர் ஹான் டக்-சூ தற்காலிக ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

NO COMMENTS

Exit mobile version