Home இலங்கை அரசியல் அரசியலில் மாற்றங்கள் ஆரம்பம்! பதவி விலகிய தென் மாகாண ஆளுநர்

அரசியலில் மாற்றங்கள் ஆரம்பம்! பதவி விலகிய தென் மாகாண ஆளுநர்

0

தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.

அவர் இன்று (22) தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.

பதவி விலகல்

வடமேல் மாகாண ஆளுநராக பதவி வகித்த லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கடந்த மே மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தென் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.  

9ஆவது நிறைவேற்று ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

இதுவரை வெளியான வாக்கு முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க முன்னிலை வகிக்கின்றார்.

மாற்றங்கள்

அநுரகுமார ஜனாதிபதியாக பதவி ஏற்பார் என்ற தகவல்களும் வெளியாகிய வண்ணமே உள்ளன.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கவிற்கு பல அரசியல்வாதிகள் பிரசார நடவடிக்கையின் போது தமது ஆதரவை வெளியிட்டிருந்தனர்.

இருப்பினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.

இதற்கமைய அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தென் மாகாண ஆளுநரின் பதவி விலகல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version