Home இலங்கை சமூகம் யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அநுர கருணாதிலக எம்.பி

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அநுர கருணாதிலக எம்.பி

0

நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை
மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக மற்றும் பிரதியமைச்சர் டி. பி.
சரத் ஆகியோர் இன்று (25) காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, யாழில் நிர்மாணிக்கப்பட்டு வரும் யாழ்.மாநகர சபை மண்டபத்தின் வேலைத் திட்டங்களையும் பார்வையிட்டுள்ளனர்.

யாழிற்கு விஜயம்

நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீபவானந்தராஜா, றஜீவன்
ஜெயச்சந்திரமூர்த்தி, நகர அபிவிருத்தி சபை அதிகாரிகள், யாழ் மாநகர சபை
ஆணையாளர் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் இதன்போது பங்கேற்றிருந்தனர்.

இதேவேளை, அநுர கருணாதிலக மற்றும் பிரதியமைச்சர் டி. பி.
சரத் ஆகியோர் இன்று யாழ்ப்பாணத்தின்
பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்தனர்.

தாக்குதல்

இதன்போது, யாழ்ப்பாண நகர மண்டபம், யாழ்ப்பாணம் பொதுசன நூலகம், கீரிமலை ஜனாதிபதி மாளிகை,
நல்லூர் நீர்த்தாங்கி, குருநகர் ஐந்து மாடி குடியிருப்பு உள்ளிட்ட பல
இடங்களுக்கு விஜயம் செய்தனர்.

இதன்போது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற
உறுப்பினர்களான ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, சிறீபவானந்தராஜா உள்ளிட்ட
துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை குருநகர் ஐந்து மாடி குடியிருப்பு பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர்
சந்திரசேகரிடம் முல்லைத்தீவில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக கேள்வி எழுப்பிய
போது பதிலளிக்க மறுத்து விட்டார். 

NO COMMENTS

Exit mobile version