Home இந்தியா லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கமாண்டரை வீழ்த்தியது இந்திய இராணுவம்!!

லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கமாண்டரை வீழ்த்தியது இந்திய இராணுவம்!!

0

காஷ்மீரின் பந்திப்போராவில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கமாண்டர் அல்தாப் லல்லி இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்திய இராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

அண்மையில், காஷ்மீரின் பஹல்காமில் நுழைந்து பயங்கரவாத அமைப்பொன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்திருந்தனர்.

இரகசிய தகவல்

அதனை தொடர்ந்து அந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தானை தளமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பின் துணை அமைப்பான ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்’ (TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்த நிலையில், குறித்த பயங்கரவாத குழுவினரை தேடும் பணியில் காஷ்மீரில் இராணுவ வீரர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் ஈடுபட்டிருந்ததையடுத்து, லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கமாண்டர் தொடர்பான இரகசிய தகவலோன்று இன்று (25) கிடைத்துள்ளது.

லஷ்கர் இ தொய்பா கமாண்டர் பலி

அந்த தகவலில், லஷ்கர் இ தொய்பா லஷ்கர் இ தொய்பா கமாண்டர் அல்தாப் லல்லி பந்திப்போராவில் பதுங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறாதொரு பின்னியில், தேடுதலில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதையடுத்து, பதிலுக்கு இராணுவம், காவல்துறையினரும் இணைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சண்டையில் லஷ்கர் இ தொய்பாவின் கமாண்டரான அல்தாப் லல்லி கொல்லப்பட்டார். 

https://www.youtube.com/embed/Nmx0aXVkuGc

NO COMMENTS

Exit mobile version