வானிலிருந்து விழுந்த ஓர் உலோகப் பொருள் தொடர்பான ஆராய்ச்சியை கென்யாவின் ஆய்வாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
இது விண்வெளிக் குப்பையாக இருக்கலாம் எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கென்யாவின் முக்குக்கு (Mukuku) பகுதியிலேயே இந்த உலோகப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
450 கிலோ
அது ரொக்கெடை ஏவும் வாகனத்தைச் சேர்ந்ததாய் இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்த உலோகப் பொருளின் நிறை சுமார் 450 கிலோகிரேமும்,
அதன் விட்டம் ஏறக்குறைய இரண்டரை மீட்டர் நீளம் கொண்டதாகவும் காணப்படுகிறது.
இந்நிலையில், குறித்த உலோகம் எங்கிருந்து வந்தது என்பதை அறியவும் தேவையான பொருள்கள் சேகரிக்கப்பட்டுளதாக கூறப்படுகிறது.
உலக அளவில் விண்வெளி ஆய்வுகள் அதிகரித்துள்ள நிலையில், விண்வெளிப்பொருட்கள் பூமியின் வட்டப் பாதையில் விழுவது அச்சமடையகூடிய விடயம் என கென்யாவின் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.