Home இலங்கை அரசியல் உறுதிப்படுத்தப்படும் சபாநாயகர் மீதான குற்றச்சாட்டுக்கள்

உறுதிப்படுத்தப்படும் சபாநாயகர் மீதான குற்றச்சாட்டுக்கள்

0

சபாநாயகர் அசோக ரங்வல(Ashoka Ranwalla) தனது கலாநிதி பட்டம் தொடர்பான உண்மையை மக்களுக்கு எடுத்துரைத்து, தனது கல்விச் சான்றிதழ்களை உறுதிப்படுத்த வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா(Nalaka Godahewa) தெரிவித்துள்ளார். 

சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அமைதி காக்கும் சபாநாயகர்

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றிருந்தால் அதனை உறுதிப்படுத்த முடியும்.  அதற்கான வழிமுறைகள் இருக்கின்றன.  இது குறித்து பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது சபாநாயகர் அமைதியாக இருப்பது உகந்ததல்ல.

நாடாளுமன்றத்தை கல்வி கற்ற சமூகத்தைக் கொண்டு நிரப்புமாறு இந்த அரசாங்கம் பிரசாரங்களை மேற்கொண்டு வந்த போதிலும்,  அது மோசடியான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது  என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version