சக உறுப்பினர்களை குறிவைத்து தகாத கருத்துக்களையும் குற்றச்சாட்டுகளையும் தெரிவிப்பதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவிர்க்க வேண்டும் என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய (14.11.2025) கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் உறுப்பினர்களுக்கு அறிவிப்புகளை வழங்கும் போது, அவர் இந்த விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.
சமீப காலமாக நாடாளுமன்றத்தில் இது போன்ற தவிர்க்கப்பட வேண்டிய செயற்பாடுகள் அதிகமாக இடம்பெறுவதாக இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்திற்குப் புறம்பான மொழி
அத்துடன், இந்த வருந்தத்தக்க விடயம், சபைக்கு அவமரியாதையை ஏற்படுத்துவதாகவும் அவர் விவரித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போது நாடாளுமன்றத்திற்குப் புறம்பான மொழியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு உறுப்பினர்களை வலியுறுத்திய அவர், இந்த விடயத்தில் உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை வழங்குமாறும் கோரியுள்ளார்.
