Home இலங்கை அரசியல் சபாநாயகர் எம்.பி.க்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

சபாநாயகர் எம்.பி.க்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

0

நாடாளுமன்றில் கேள்வி நேரத்தின் போது நிலையியற் கட்டளைகளை கடைபிடிக்குமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அத்தோடு, நிலையியற் கட்டளை 27(2) ஐ தவறாகப் பயன்படுத்துவது குறித்து உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் (21) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அறிவுறுத்தல்

எதிர்க்கட்சித் தலைவரும் பிற கட்சித் தலைவர்களும் சமீபத்தில் எழுப்பிய கேள்விகளை வாய்மொழி கேள்விகளாகவோ அல்லது ஒத்திவைப்பு விவாதத்தின் போது இன்னும் பொருத்தமாக முன்வைத்திருக்கலாம் என்று சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல கட்சித் தலைவர்கள் தொடர்பில்லாத கேள்விகளை எழுப்புவதன் மூலம் நிலையியற் கட்டளைகளை மீறியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எழுப்பப்படும் அனைத்து கேள்விகளும் நாடாளுமன்ற நடைமுறைக்கு கண்டிப்பாக இணங்க வேண்டும் எனவும் சபாநாயகர் வலியுறுத்தியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version