Home இலங்கை அரசியல் எதிர்க்கட்சி விளைவித்த குழப்பம்! சபையில் இருந்து வெளியேறிய சபாநாயகர்…

எதிர்க்கட்சி விளைவித்த குழப்பம்! சபையில் இருந்து வெளியேறிய சபாநாயகர்…

0

நாடாளுமன்றில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உப்பினர்கள் எழும்பி நின்று நாடாளுமன்ற நடவடிக்கைகளை முன்கொண்டு செல்ல முடியாத வகையில் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தியோடு சபாநாயகருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஹர்சன ராஜகருணாவுக்கு (Harshana Rajakaruna) பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு தொடர்ந்தும் கூச்சலிட்டு குழப்பம் ஏற்படுத்தினர். சபாநாயகர் கடும் தொனியில் பேசியும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சல் குழப்பத்தை நிறுத்தவில்லை.

அச்சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எழும்பி நின்று விளக்கம் தெரிவித்த போதும் சபாநாயகர் அவரை பேச விடாமல் நிறுத்தினார். தொடர்ந்து கூச்சல் குழப்பத்தில் சபை நடவடிக்கை முன்கொண்டு செல்லப்பட்டது.

நேற்று ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் பெற்று வெளிநாட்டு பல்கலைக்கழத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டது தொடர்பில் ஹர்சன ராஜகருணாவுக்கு விளக்குவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்ட போது அவர் குறித்த விடயத்துக்கு அப்பால் சென்று கருத்து தெரிவித்ததை அடுத்து சபாநாயகர் அவரை நிறுத்தியால் ஏற்பட்ட கூச்சல் குழப்பம் தொடர்ந்தது.

பின்னர் சபாநாயகர் பிரதி சபாநாயகருக்கு சபையை பாராப்படுத்திவிட்டு வெளியேறிச் சென்றார்.

https://www.youtube.com/embed/DgLvjYd56GQ

NO COMMENTS

Exit mobile version