Home இலங்கை அரசியல் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து சபாநாயகரின் அறிவிப்பு

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து சபாநாயகரின் அறிவிப்பு

0

பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ன இன்று நாடாளுமன்றில் கருத்து வெளியிட்டுள்ளார்.

எதிர்க்கட்சியின் 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு இந்த நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

பொருத்தமான நடவடிக்கை

இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும், உரிய நேரத்தில் பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

அருண ஜயசேகரவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் உரிய முறையில் சமர்ப்பிக்கப்படவில்லை என பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த முன்மொழிவை ஆராய்ந்து வருவதாகவும் அது குறித்து விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். 

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தெண்டாயுதபாணி உற்சவம்

NO COMMENTS

Exit mobile version