Home இலங்கை சமூகம் பொய்யான செய்தி! நீர்பாசன திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

பொய்யான செய்தி! நீர்பாசன திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

0

சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள நிலையால், மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர்
மாசுபட்டுள்ளது என்ற பொய்யான செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக மன்னார்
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இந்த தகவல் முழுவதும் வதந்தி என்பதை தெளிவாக அறிவிக்கிறோம்.

மன்னார் மாவட்டத்திற்கு வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பான குழாய் கிணறுகளில்
இருந்து பெறப்படுகிறது.

எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை

இந்த நீர்மூலங்கள் மேற்பரப்பு வெள்ளத்தால் எந்த
விதத்திலும் பாதிக்கப்படவில்லை.

எங்களின் ஆய்வக பிரிவு தொடர்ச்சியாக நீர் தரத்தை பரிசோதித்து மன்னார்
மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது மற்றும் குடிப்பதற்கு ஏற்றது
என்பதை உறுதிப்படுத்தி வருகிறது.

ஆகையால், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் .வதந்திகளை நம்ப வேண்டாம். தேவையான
எந்த அறிவிப்பும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால்
உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.என மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும்
வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

செய்தி – நயன்

NO COMMENTS

Exit mobile version