ஸ்ரீ தலதா மாளிகைக்கு செல்ல விசேட போக்குவரத்து சேவை வழங்கப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
ஸ்ரீ தலதா மாளிகை கண்காட்சியைக் காண கண்டிக்குச் செல்லும் பக்தர்களுக்காக இவ்வாறு விசேட போக்குவரத்து சேவை வழங்கப்படவுள்ளது.
போக்குவரத்து வசதிகள்
இதன்படி, எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை இந்த சிறப்புப் போக்குவரத்து வசதிகள் வழங்கப்படும் என்று, இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
மேலும் நாட்டின் ஒவ்வொரு முக்கிய நகரத்திலிருந்தும் கண்டிக்கு சிறப்பு SLTB பேருந்து சேவைகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
