Home இலங்கை பொருளாதாரம் பேரீச்சம்பழம் மீதான விசேட பண்ட வரி குறைப்பு : வெளியான வர்த்தமானி

பேரீச்சம்பழம் மீதான விசேட பண்ட வரி குறைப்பு : வெளியான வர்த்தமானி

0

பேரீச்சம்பழத்தின் மீதான விசேட பண்ட வரியைக் குறைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிதி அமைச்சு (Ministry of Finance) இந்த விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பேரீச்சம்பழத்தின் மீதான தற்போதைய விசேட பண்ட வரியான 200 ரூபாவை கிலோவிற்கு ஒரு ரூபாவாக ஆகக் குறைத்து குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் நன்கொடை 

மேலும் குறித்த பண்ட வரிக் குறைப்பு இன்று (28.01.2025) முதல் 2025 மார்ச் 31 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நல்லெண்ணத்தின் அடையாளமாக, ரமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் நுகர்வுக்காக சவுதி அரேபியா (Saudi Arabia) இலங்கைக்கு 50 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முனீர் முலாஃபர், இந்த பேரீச்சம்பழங்கள் ஏற்கனவே நாட்டிற்கு வந்துவிட்டதாக உறுதிப்படுத்தியதுடன் நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களுக்கு பேரீச்சம்பழங்கள் விநியோகிக்கப்படும் என குறிப்பிட்டார்.

NO COMMENTS

Exit mobile version