Home இலங்கை சமூகம் மன்னார் பாலியாறு குடிநீர் திட்டத்தை ஆராய விசேட கள விஜயம்

மன்னார் பாலியாறு குடிநீர் திட்டத்தை ஆராய விசேட கள விஜயம்

0

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெள்ளாங்குளம்
கிராமத்தில் பாலியாறு குடிநீர் திட்டம் நடைமுறைபடுத்துவதற்கான ஒருங்கிணைந்த கள
விஜயம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) மாலை இடம்பெற்றது

குறித்த கள விஜயதில் வனவள மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் மற்றும் வீடு
அமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், நீர்ப்பாசன
பணிப்பாளர் மற்றும் அரச உயர் அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், கிராம மக்கள்
என பலரும் கலந்து கொண்டனர்.

அமைச்சர் உள்ளிட்ட குழுவினர்

தொடர்ந்து அரச திணைக்கள அதிகாரிகளால் திட்டம் தொடர்பான விளக்கம் அமைச்சர்
உள்ளிட்ட குழுவினருக்கு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து குறித்த திட்டம் நடைமுறைப் படுத்தப்படும் பிரதேசத்தினை
அமைச்சர் குழுவினர் சென்று பார்வையிட்டனர்.

NO COMMENTS

Exit mobile version