Home முக்கியச் செய்திகள் பொது போக்குவரத்து சேவை : வெளியான விசேட வர்த்தமானி

பொது போக்குவரத்து சேவை : வெளியான விசேட வர்த்தமானி

0

பொது போக்குவரத்து சேவைகளை அத்தியாவசிய சேவையாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானியானது 1979 ஆம் ஆண்டு 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் பிரகாரம் அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய வெளியிடப்பட்டதாக  தெரிவிக்கப்படுகின்றது.

அத்தியாவசிய சேவை

அத்தோடு, மேற்படி வர்த்தமானியை அதிபரின் செயலாளர்  வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், பயணிகள் அல்லது பொருட்கள் போக்குவரத்துக்காக வீதிகள், பாலங்கள், தொடருந்து வீதிகள் மற்றும் தொடருந்துகள் போன்றவற்றின் மூலம் போக்குவரத்துச் சேவைகளை இலகுபடுத்துவதற்கும் மற்றும் பராமரிப்பதற்கும் உரிய வர்த்தமானி அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version