பொலன்னறுவை பகுதியில் உள்ள அரிசி ஆலைகள் இன்று விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி அரிசி ஆலைகளில் தினசரி உற்பத்தி செய்யப்படும் அரிசியின் அளவு, இருப்பு அளவு மற்றும் சந்தைக்கு வெளியிடப்படும் அரிசியின் அளவு ஆகியவை குறித்த அறிக்கை பெறப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய, எதிர்காலத்தில் அனைத்து அரிசி ஆலைகளிலும் தகவல்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அரிசி ஆலை
மேலும், அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று (07) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி இன்று முதல் அனைத்து அரிசி ஆலைகளுக்கும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.