Home இலங்கை பொருளாதாரம் நாட்டில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு! அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு! அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

0

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் வெங்காயச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் வெங்காயத்துக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கை

இதனால் இந்தியாவிலிருந்து 20,000 மெற்றிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு வெங்காய நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

நாட்டில் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் மன்னார், ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் பாரியளவு வெங்காயச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசிக்கான தட்டுப்பாட்டைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யு.கே. சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அரிசி இறக்குமதி விடயத்தில் அசமந்த போக்கில் செயற்பட்டுள்ளது.

அரிசிக்கான தட்டுப்பாடு நிலவிய காலப்பகுதியில் அரசாங்கம் விரைவாகச் செயற்பட்டு அரிசியை இறக்குமதி செய்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version