ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும்(Sajith Premadasa) இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையே
விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு, யாழ்ப்பாணம்(Jaffna) மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமை
அலுவலகத்தில் நேற்று(10.06.2024) நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் வேளையில் முன்னிலைப்பெறும் 13ஆவது திருத்தம்
ஜனாதிபதி தேர்தல்
இதன்போது, ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட தமிழ் அரசுக் கட்சியின் ஆதரவை
கோருவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், இந்த கலந்துரையாடலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் கட்சித் தலைவர்
மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கட்சியின் துணைச்
செயலாளர் சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நாடாளுமன்ற
உறுப்பினர் எரான் விக்ரமரத்ன ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இயக்கச்சியில் பண்ணையில் இயற்கை உரங்களால் காய்த்துக் குலுங்கும் பயத்தங்காய்
அரசமைப்பின் பிரகாரம் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள அனைத்தையும்
நடைமுறைப்படுத்துவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.
“தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வாக 13ஐ நடைமுறைப்படுத்துவேன்
எனத் தெரிவித்துள்ளீர்கள். அது 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள காணி,
பொலிஸ் அதிகாரம் உள்ளிட்ட வகையிலான தீர்வாக அமையுமா?” என்று ஊடகவியலாளர்கள்
கேட்டபோதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“அரசமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தச் சட்டம் அப்படியே நடைமுறைப்படுத்தப்படும். மைனஸும் இன்றி, பிளஸும் இன்றி முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.” என்றார்.
வவுனியா – ஓமந்தையில் 235 ஏக்கர் காணி விடுவிப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |