Home இலங்கை அரசியல் ஜூலி சங் – மனோ கணேசன் இடையே விசேட சந்திப்பு

ஜூலி சங் – மனோ கணேசன் இடையே விசேட சந்திப்பு

0

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரம், அதிகாரப் பகிர்வு
விடயம் தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குடன் தமிழ் முற்போக்குக்
கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு
நடைபெற்றுள்ளது என்று மனோ கணேசன் எம்.பியின் ஊடகப் பிரிவு இன்று
தெரிவித்துள்ளது.

இனப்பிரச்சினை தீர்வு

மேலும், இனப்பிரச்சினைத் தீர்வுக்கான நகர்வு, அதிகாரப் பகிர்வு, மலையக பெருந்தோட்டக்
காணி உரிமை, சட்டத்தின் ஆட்சி, பொருளாதார சவால்கள், சர்வதேச நாணய நிதியம் ஆகிய
தலைப்புகளில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது என்று மனோ கணேசன் எம்.பி.
ஊடகங்களுக்குத் தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version