Home இலங்கை அரசியல் பொறுப்புக்கூறல் விவகாரம்! அமெரிக்க தரப்புடன் தமிழ் எம்.பி.க்கள் விசேட சந்திப்பு!

பொறுப்புக்கூறல் விவகாரம்! அமெரிக்க தரப்புடன் தமிழ் எம்.பி.க்கள் விசேட சந்திப்பு!

0

இலங்கையில் பொறுப்புக்கூறல், நீதி, நல்லிணக்கம் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு அமெரிக்கா எவ்வாறு தொடர்ந்து ஆதரவளிக்க முடியும் என்பது குறித்து வடக்கு கிழக்கு எம்.பி.க்களுன் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசுக்கு இனியும் கால நீடிப்பும் அரசியல் வெளியும் வழங்காது, பொறுப்புக்கூறல் தொடர்பான குற்றவியல் பொறுப்புத் தொடர்பான சர்வதேச விசாரணையை நோக்கி அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்க, தமிழ் தரப்புகள் சர்வதேச அரசாஙட்கத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் தீர்மானங்களும், அவை தொடர்பான நடவடிக்கைகளும், அறிக்கையிடல்களும் இலங்கைத் தீவில் இடம்பெற்ற சர்வதேசக் குற்றங்கள் தொடர்பான கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது.

எனினும், இலங்கை மீது தொடர்ச்சியாக அழுத்தங்களை மேற்கொண்டு வந்துள்ள போதிலும், பொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கையில் மாறி மாறி ஆட்சிப்பீடம் ஏறி வரும் அரச தரப்பினர் அவ்வப்போது வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அவற்றை மீளப்பெற்றுள்ள அரசியல் விருப்பற்ற கண்துடைப்பு நடவடிக்கைகளே தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றன.

இந்நிலையில் இன்று இடம்பெற்றுள்ள  அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பு தொடர்பில்  நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், கருத்து தெரிவிக்ககையில்…

NO COMMENTS

Exit mobile version