Home இலங்கை அரசியல் தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு – செய்திகளின் தொகுப்பு

தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு – செய்திகளின் தொகுப்பு

0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான
ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ
ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கண்பார்வையற்ற வாக்காளர் ஒருவர் வாக்குச் சாவடிக்குச் செல்லும் போது அங்கு
கடமையில் இருக்கும் சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தரின் உதவியுடன் இலகுவாக
வாக்களிக்க, வாக்குச் சீட்டினை தொட்டுணரக்கூடிய வகையில் தேர்தல்கள் ஆணைக்குழு
ஏற்பாடுகளை செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும்
எனவும் எவ்வாறு தமது வாக்குகளை இடவேண்டும் எனவும் வாக்காளர்களுக்காகத்
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள செயற்பாடுகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு…

NO COMMENTS

Exit mobile version