Home இலங்கை அரசியல் இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக நாடாளுமன்றத்தை நோக்கி பயணிக்கும் மாற்றுத்திறனாளி

இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக நாடாளுமன்றத்தை நோக்கி பயணிக்கும் மாற்றுத்திறனாளி

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக மாற்றுத்திறனாளி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர் ஒருவரை பொதுத் தேர்தலுக்கான தேசிய பட்டியலில் தேசிய மக்கள் சக்தி இணைத்துள்ளது.

தேசிய பட்டியல் 

தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நிஹால் அபேசிங்க மற்றும் ஜேவிபியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஆகியோரின் பங்குபற்றுதலுடன், தேசிய மக்கள் சக்தி, தனது தேசியப் பட்டியலுக்கான வேட்புமனுக்களை இறுதி செய்துள்ளது.

இந்தநிலையில், கட்சியின் தேசிய பட்டியலில் வணிகர்கள், சட்டத்தரணிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், கணக்காளர்கள், கலைஞர்கள் மற்றும் சிவில் ஆர்வலர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version