சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, இந்த சீரியலை பார்க்க எங்களுக்கு ரொம்ப ஆசை என தொடரை கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள்.
விஜய் டிவி சீரியலில் டிஆர்பி டாப்பில் இருக்கும் இந்த தொடர் அடுத்தடுத்து விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.
இப்போது கதையில் முத்து-மீனா, ரோஹினி மீது முழுமையான சந்தேகத்துடன் உள்ளனர், அவர் ஏதோ தவறுகள் செய்கிறார் என்பதில் மட்டும் உறுதியாக உள்ளனர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 10 சீரியல்களின் நேரம் மாற்றம்… முழு விவரம் பாருங்க
ஸ்பெஷல் தகவல்
தற்போது இந்த சீரியல் குறித்து வந்த ஸ்பெஷலான தகவல் என்னவென்றால் வரும் ஜனவரி 20ம் தேதி முதல் சூப்பர் விஷயம் நடக்கப்போகிறது.
அதாவது ஜனவரி 20ம் தேதி முதல் சிறகடிக்க ஆசை சீரியல் இரவு 9 முதல் 10 மணி வரை 1 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளதாம். இந்த தகவல் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.