Home சினிமா ஞாயிற்றுக்கிழமை விஜய் டிவி சீரியலின் சூப்பர் ஸ்பெஷல் எபிசோட்… எந்த தொடர் தெரியுமா?

ஞாயிற்றுக்கிழமை விஜய் டிவி சீரியலின் சூப்பர் ஸ்பெஷல் எபிசோட்… எந்த தொடர் தெரியுமா?

0

விஜய் டிவி

ரியாலிட்டி ஷோக்களின் ராஜாவான விஜய் டிவி இப்போது சீரியல்களிலும் கலக்கி வருகிறார்கள்.

சன் டிவியை அடுத்து மக்களால் கொண்டாடப்படும் தொடர்களை ஒளிபரப்பி வருகிறது விஜய் டிவி.
சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ், மகாநதி, சின்ன மருமகள் போன்ற தொடர்கள் விஜய் டிவி டாப் தொடர்களாக உள்ளது.

ஒவ்வொரு வாரமும் விறுவிறுப்பின் உச்சமாக தொடர்களின் கதைக்களமும் அமைந்து வருகிறது.

ஸ்பெஷல்

சன் டிவியில் இப்போது மூன்று முடிச்சு மற்றும் மருமகள் தொடர்களின் மெகா சங்கமம் நடந்து வருகிறது.

அடுத்தடுத்தும் சில தொடர்களின் மெகா சங்கமம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விஜய் டிவி மெகா சங்கமத்திற்கு பதிலாக ஸ்பெஷல் எபிசோடுகளை ஒளிபரப்ப முடிவு செய்துள்ளனர்.

அதாவது வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கி 1.5 மணி நேரம் ஸ்பெஷல் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளதாம். 

NO COMMENTS

Exit mobile version