Home முக்கியச் செய்திகள் இன்று வாக்களிக்க செல்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல் – கட்டாயம் செய்ய வேண்டியது

இன்று வாக்களிக்க செல்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல் – கட்டாயம் செய்ய வேண்டியது

0

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (21) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளன.

காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4 மணி வரையில் இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிக்க வாக்காளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த பின்வரும் ஆவணங்களில் ஒன்றை எடுத்துச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

9 முக்கிய ஆவணங்கள்

தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு,செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம், பொது சேவை ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை,  மதகுருமார்களுக்கான அடையாள அட்டை.

தேசிய அடையாள அட்டை தகவலை உறுதிப்படுத்தும் கடிதம், மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை, ஏனைய நபர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை

மேற்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட 9 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க முடியும் என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

தேர்தலின் போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருப்பதற்காகவும், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடத்தும் வகையிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

 

நாடளாவிய ரீதியில் மொத்தம் 13,400 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் 1 கோடியே 70 இலட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.

மேலும் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவரை தவிர 38 பேர் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version