Home முக்கியச் செய்திகள் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

0

கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை நடைபெறவுள்ள நிலையில், பரீட்சை தொடர்பான வினாத்தாள் விநியோகம் நாளை மறுதினம்(3) இடம்பெறவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மேலும், பரீட்சை நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மழையினால் ஏற்படும் அவசர நிலைமைகளுக்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர்   தெரிவித்துள்ளார்.

மழை பெய்து வருவதால் மாணவர்கள் தேர்வு மத்திய நிலையத்திற்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டால், 117 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு செல்ல காத்திருக்கும் இலங்கையர்கள்: வெளியாகியுள்ள முக்கிய தகவல்

மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

இந்த வருடம் 459,979 பரீட்சார்த்திகள் பொதுப் பரீட்சைக்கு தோற்றவுள்ளதுடன்
3527 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேவளை,
நேற்று நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் பொதுப் பரீட்சை தொடர்பான பயிற்றுவிப்பு வகுப்புகள் உட்பட அனைத்து பயிலரங்குகளும் தடை விதிக்கப்பட்டுள்ளன.

இதற்கு எதிராக எவரேனும் அல்லது நிறுவனமோ செயற்பட்டால் கடும் தண்டனை வழங்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version