Home இலங்கை சமூகம் தொடருந்து பாதைகளில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட செயற்றிட்டம்

தொடருந்து பாதைகளில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட செயற்றிட்டம்

0

மட்டக்களப்பு – கொழும்பு தொடருந்து பாதையில் காட்டுப் பகுதிகளில் காட்டு யானைகள் தொடருந்துகளில் மோதுவதைத் தடுக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக வீடமைப்புத் துறை பிரதி அமைச்சர் டி.பி. சரத் ​​தெரிவித்துள்ளார்.

 வனப்பகுதிகளில் தொடருந்துளை ஓட்டும்போது வேகத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, காட்டு யானைகள் தொடருந்துகளில் மோதுவதைத் தடுப்பதற்கான தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்துவது குறித்து இன்று (24) சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version