Home இலங்கை கல்வி நாட்டின் சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை: வெளியான முக்கிய அறிவிப்பு

நாட்டின் சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை: வெளியான முக்கிய அறிவிப்பு

0

கண்டி வலயக் கல்விக்குட்பட்ட பாடசாலைக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு கண்டி இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

விசேட விடுமுறை

இதற்கமைய, எதிர்வரும் ஜூலை 29 முதல் ஓகஸ்ட் 4 ஆம் திகதிவரை இரண்டாம் தவணை விடுமுறைக்காக பாடசாலைகள் மூடப்படும் என கண்டி வலயக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.

கண்டியில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறைகள் ஓகஸ்ட் 8 முதல் ஓகஸ்ட் 17ஆம் திகதி வரை வழங்கப்படுவதோடு முஸ்லிம் பாடசாலைகள் ஓகஸ்ட் 20 முதல் ஓகஸ்ட் 24ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version