Home இலங்கை சமூகம் கொழும்பில் இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்: களமிறங்கும் விசேட அதிரடிப்படையினர்

கொழும்பில் இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்: களமிறங்கும் விசேட அதிரடிப்படையினர்

0

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ராஜகிரியவில்
உள்ள தேர்தல் செயலகத்தில் இன்று (15) கையளிக்கப்படவுள்ளன.

இதன் காரணமாக இன்று (15) கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கமைய இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

விசேட போக்குவரத்து திட்டம்

இந்த பாதுகாப்பு திட்டங்களுக்கு விசேட அதிரடிப்படையினரின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, இன்று காலை 8:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். 

இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளருடன் கட்சியின் செயலாளர் உட்பட இருவருக்கு மாத்திரமே வேட்புமனு ஏற்கும் அலுவலகத்திற்குள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்களைத் தவிர மேலும் மூவர் தேர்தல் அலுவலக வளாகத்திற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version