Home இலங்கை சமூகம் மோடியின் வருகைக்கு தயாரான கொழும்பு நகரம்: மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

மோடியின் வருகைக்கு தயாரான கொழும்பு நகரம்: மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

0

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi)  இலங்கை வருகையை முன்னிட்டு கொழும்பு மற்றும் பல பகுதிகளில் சிறப்பு போக்குவரத்துத் திட்டம் மற்றும் சிறப்பு பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியேட்சகர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

பயண ஏற்பாடு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணம் ஏப்ரல் 4 ஆம் திகதி தொடங்கவுள்ள நிலையில், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பேஸ்லைன் வீதி ஆகியவை அவ்வப்போது மூடப்படும் என அவர் அதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இந்த காலகட்டத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் மக்கள், வீதிகள் மூடப்படுவதைக் கருத்தில் கொண்டு தங்கள் பயண ஏற்பாடுகளைத் திட்டமிடவும் அறிவுறுத்தப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

பொதுமக்களின் ஆதரவு

இதேவேளை, ஏப்ரல் 5 ஆம் திகதி கொழும்பின் காலி முகத்திடல் பகுதி, சுதந்திர சதுக்கத்தைச் சுற்றியுள்ள பகுதி மற்றும் பத்தரமுல்லையில் உள்ள அபே கம வளாகங்களில் உள்ள வீதிகளும் அவ்வப்போது மூடப்பட வேண்டியிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

இதன்படி, குறித்த சிறப்பு போக்குவரத்துத் திட்டத்திற்கு அனைத்து சாரதிகளும் பொதுமக்களும் ஆதரவளிக்குமாறு இலங்கை காவல்துறை கேட்டுக்கொள்வதாக புத்திக மனதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version