Home இலங்கை சமூகம் கொழும்பில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம்! வெளியான காரணம்

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம்! வெளியான காரணம்

0

16வது தேசிய போர் வீரர் நினைவு நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள இராணு வீரர்கள் நினைவுச் சின்னத்திற்கு முன்பாக மாலை 4.00 மணி முதல் நடைபெறவுள்ளது.

இதன் காரணமாக பத்தரமுல்ல நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விசேட போக்குவரத்துத் திட்டம்

இந்த யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் ஜனாதிபதி கலந்து கொள்ளமாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்குப் பதிலாக பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த தீர்மானம் நேற்று சடுதியாக மாற்றிக் கொள்ளப்பட்டு, இன்றைய யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொள்ளவுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version