Home இலங்கை சமூகம் சந்தையில் தேங்காய் எண்ணெய் மோசடி! நீளும் முறைப்பாடுகள்

சந்தையில் தேங்காய் எண்ணெய் மோசடி! நீளும் முறைப்பாடுகள்

0

பாவனைக்கு உட்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு சந்தைக்கு அனுப்பப்படும் மோசடி தொடர்ந்து இடம்பெறுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சமீரா முத்துக்குடா கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பண்டிகைக் காலத்தில் சுகாதாரத் தரங்கள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் டிசம்பர் 1ஆம் திகதி முதல் சோதனையைத் தொடங்கினர்.

சோதனை நடவடிக்கை

இந்த சோதனையில், மிளகாய்ப் பொடி, கறிவேப்பிலை, மஞ்சள் உள்ளிட்ட கலப்பட மசாலாப் பொருட்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் முறைப்பாடு எழுந்துள்ளது.

5000இற்கும் மேற்பட்ட கடைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் 450 கடைகள் நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுகளை விற்பனை செய்தமைக்காக வழக்குத் தொடரப்பட்டுள்ளது”என அவர் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version