Home இலங்கை அரசியல் தமிழரசுக் கட்சிக்கு பாடத்தை புகட்டிய தமிழர்கள்: சிறீதரன் வெளிப்படை

தமிழரசுக் கட்சிக்கு பாடத்தை புகட்டிய தமிழர்கள்: சிறீதரன் வெளிப்படை

0

இலங்கை தமிழரசுக்கட்சி(TNA) மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பும், அதற்கான பாடத்தை புகட்டவவேண்டும் என்ற சிந்தனையுமே தேசிய மக்கள் சக்தியை வடக்கு – கிழக்கு மக்கள் ஆதரிக்க காரணம் என நாடாளுமன்றிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள அக்கட்சியின் உறுப்பினர் சி. சிறீதரன்(S. Sritharan) தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

தமிழரசுக் கட்சி

”இலங்கை தமிழரசுக் கட்சியானது தன்னுடைய தரப்பை கொண்டு சென்று வழக்கில் நிறுத்தியது.

அந்த வழக்கானது கட்சி மீதான வெறுப்பை மக்கள் முன்னால் கொண்டுவந்திருந்தது.

இந்த நிலைமை காரணமாக தமிழரசுக்கட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற தீர்மானத்தை மக்கள் முன்னெடுத்திருந்தனர்.

தோல்வியாக கருதமுடியாது

அதற்காக வேறு ஒரு தரப்புக்கு வாக்களிப்பதாக அரச ஊழியர்களும், இளம் தலைமுறையினரும் ஒரு முடிவை மேற்கொண்டனர்.

எனினும் தமிழர்களை பொறுத்தவரை இதை தோல்வியாக கருதமுடியாது.

தமிழ் தேசியம் என்பது அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான ஒரு அடித்தளத்தை மக்கள் இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்” என்றார்.

NO COMMENTS

Exit mobile version